73. தெய்வச் சேக்கிழார் பெருமான்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 73
இறைவன்: திருநாகேஸ்வரர்
இறைவி : காமாட்சியம்மை
தலமரம் : செண்பக மரம்
தீர்த்தம் : சூர்யபுஷ்கரணி
குலம் : சைவ வேளாளர்
அவதாரத் தலம் : குன்றத்தூர்
முக்தி தலம் : குன்றத்தூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : வைகாசி - பூசம்
வரலாறு : தொண்டை நாட்டிலே குன்றத்தூரில் திருஅவதாரம் செய்தார். சேக்கிழார் என்பது குடிப்பெயர். இவரது இயற்பெயர் அருண்மொழித் தேவர். இவரது சகோதரர் பெயர் பாலறாவாயர். சோழ மன்னன் அருண்மொழித் தேவரைத் தன் அமைச்சராக நியமித்தி உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டத்தையும் தந்துச் சிறப்பித்தான். சோழ நாட்டுத் தலமான திருநாகேச்சுரத்து இறைவர்பால் பேரன்பு கொண்ட சேக்கிழார் அக்கோயிலைப் போலவே தான் பிறந்த ஊரான குன்றத்தூரில் ஒரு கோயிலைக் கட்டவேண்டும் என்று எண்ணி அதுபோல் கட்டியும் முடித்தார். அக்கோயிலுக்குத் திருநாகேஸ்வரம் என்றும் பெயரிட்டார். சோழ மன்னன் சில புறச்சமய அவக்கதைகளிலெல்லாம் நாட்டம் கொண்டிருப்பதைக் கண்ட சேக்கிழார் சிவகதையாகிய அடியார்களின் பெருமைகளை படிப்பாயாக என்று அறிவுறுத்தினார். அங்ஙனமாயின் அவ்வடியார்களின் வரலாற்றினை நீரே எழுதுக என்று அரசர் கூறினார். அதற்கு இசைந்த சேக்கிழார் பெருமான் சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகையையும், நம்பிஆண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடிப்படையாகக்கொண்டு திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தை இயற்றினார். அதில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறுகளும் தொகையடியார்கள் ஒன்பதின்மர் வரலாறுகளும் சேர்ந்து ஆக எழுபத்திரண்டு நாயன்மார்கள் வரலாறுகள் தரப்பட்டுள்ளன. இந்நூல் சைவத் திருமுறைகளுள் பன்னிரண்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
முகவரி : அருள்மிகு. திருநாகேஸ்வரசுவாமி திருக்கோயில்,(இராகு தலம்) குன்றத்தூர், சென்னை – 600069 காஞ்சிபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. முருகானந்தன் இராமமூர்த்தி அவர்கள்
2/136.பெரிய தெரு
குன்றத்தூர்
அலைபேசி : 9444275742

இருப்பிட வரைபடம்


உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

- பெ.பு. 1
பாடல் கேளுங்கள்
 உலகெலாம்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க